ஆம்பூரில் தொடங்கப்பட உள்ள சித்தா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆய்வு


ஆம்பூரில் தொடங்கப்பட உள்ள சித்தா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 25 May 2021 6:40 PM GMT (Updated: 25 May 2021 6:40 PM GMT)

ஆம்பூரில் தொடங்கப்பட உள்ள சித்தா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

ஆம்பூர்

ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே வித்ய விஹார் கல்விக் குழும வளாகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்தா மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அங்குள்ள சித்தா மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக ஆம்பூர் வர்த்தக மையத்தில் கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ. வில்வநாதன், வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் நகராட்சி ஆணையர் த.சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story