நாமக்கல்லில் முழு ஊரடங்கை மீறிய 216 வாகனங்கள் பறிமுதல்


நாமக்கல்லில் முழு ஊரடங்கை மீறிய 216 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 May 2021 12:11 AM IST (Updated: 26 May 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக நேற்று 216 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எலச்சிபாளையம்:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் முழு ஊரடங்கின் 2-வது நாளான நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றிய 214 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஒரு டிராவல்ஸ் வேனும், சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 534 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைய ரவுண்டானா, சேலம் ரோடு ஆகிய பகுதிகளில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த நபர்களின் 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் திருச்செங்கோடு காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருச்செங்கோடு நகர், ஊரகம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை ஆகிய பகுதிகளில் மொத்தம் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story