ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
மாட்டுத்தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாயில்பட்டி,
மாட்டுத்தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொழுவத்தில் மதுபாட்டில்
வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் ராமகாளிதாஸ் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது செவல்பட்டி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் பெரியசாமி (வயது38) என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து போலீசார் ேசாதனை செய்து பார்த்த போது 15 அட்டைப்பெட்டியில் வைத்திருந்த 634 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்து பெரியசாமியை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story