திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்; உயிர் பலி எண்ணிக்கையும் குறைந்தது
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம் ஆகி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம் ஆகி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரருக்கும், துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 158 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,268 என இருந்தது நேற்று இறங்குமுகமாக ஆயிரத்து 1,110 ஆக உள்ளது.
நிம்மதி
இதேபோல் நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. நேற்று அது 17 ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியிருப்பது மக்களை ஓரளவு நிம்மதி அடைய செய்துள்ளது.
அதேநேரம் நேற்று மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்து ஆயிரத்து 1,552 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தொடர்ந்து தற்போது 10 ஆயிரத்து 328 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 477ஆக உள்ளது.
Related Tags :
Next Story