தென்காசியில் 27 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்
தென்காசியில் 27 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
தென்காசி:
தென்காசியில் 27 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் யாரும் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளை அவர்கள் வீடு தேடி சென்று கொடுக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளது.
காய்கறிகள் விற்பனை
தென்காசியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் காய்கறிகள் விற்பனை செய்யும் பணி நேற்று தொடங்கியது.
மொத்தம் 27 வாகனங்களில் வீதிவீதியாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதில் ரூ.150-க்கு அனைத்து காய்கறிகளும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story