துவரங்குறிச்சி அருகே நள்ளிரவில் குடிசை தீயில் எரிந்து சாம்பல்
துவரங்குறிச்சி அருகே நள்ளிரவில் குடிசை தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
துவரங்குறிச்சி,
துவரங்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அடைக்கன். விவசாயியான இவரது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் பொருட்களை வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை முற்றிமாக எரிந்து சாம்பலானதுடன் அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story