நெல்லையில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
வங்கக்கடலில் உருவாகிய புயலால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று நெல்லையில் பகலில் வெயில் அடித்தது. மாலையில் மேகமூட்டமாக காட்சி அளித்தது.
இரவு 7.30 மணி அளவில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. அதன் பிறகு பரவலாக விட்டு, விட்டு மழை பெய்தது.
நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியது.
சேரன்மாதேவி
இதேபோல் சேரன்மாதேவி, வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடந்தது.
இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story