2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 26 May 2021 1:02 AM IST (Updated: 26 May 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). இவர் அடிதடி, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற ராஜா (27) கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 2 பேரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு அதனை ஏற்று அருண்குமார், இசக்கிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

உடனே 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை போலீசார் அந்தந்த மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

Next Story