ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 26 May 2021 1:04 AM IST (Updated: 26 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக்குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 12 விவசாயிகள் 38210 தேங்காய்களை 19 குவியல்கள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்ச விலையாக ரூ.14.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8.75-க்கும் சராசரியாக ரூ.9.92-க்கும் ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.64 லட்சம் தேங்காய்கள் வியாபாரம் நடந்தது.

Next Story