கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறிய 85 பேருக்கு அபராதம்
கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறிய 85 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2 -வது கட்ட பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் என்பது போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 51 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபெட்டுகள், ஒரு கார் என மொத்தம் 52 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் சென்ற 83 பேர் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இருந்த 2 பேர் என மொத்தம் 85 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story