சிறு, குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்வது எப்படி?


சிறு, குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்வது எப்படி?
x
தினத்தந்தி 26 May 2021 1:53 AM IST (Updated: 26 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்வது எப்படி? என்று வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்வது எப்படி? என்று வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறு,குறு விவசாயிகள்

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் டிராக்டர் நிறுவனமான டாபே மூலம் விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்து பயன்பெறலாம். .இந்த திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள 2 ஏக்கர் நிலம் வரை இலவசமாக உழவுப்பணி மேற்கொள்ளலாம்.

முன்பதிவு

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் அல்லது இலவச அழைப்பு எண் 18004200100- என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு அடிப்படையில் தங்களிடம் அலுவலர்கள் தொடர்பு கொண்டு தாங்களுக்கு தேவைப்படும் பண்ணை எந்திரங்களை இலவசமாக வழங்கி உழவுப்பணி மேற்கொள்ளப்படும், இதன் மூலம் விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் பண்ணைப் பணிக்குரிய உழவு செலவுகள் குறையும்.
 மேலும் உழவன் செயலில் உள்ள வாடிக்கையாளர் வாடகை மையம் மூலமும் பதிவுசெய்து பயன் பெறலாம், எனவே சிவகங்கை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை 60 நாட்களுக்குள் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தாங்கள் அப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story