நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்


நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 May 2021 1:55 AM IST (Updated: 26 May 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

கரூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இருந்தாலும் கொரோனாவின் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
 தற்போது 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அரசு பழைய மருத்துவமனை அருகில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


Next Story