முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 May 2021 1:59 AM IST (Updated: 26 May 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

வேலாயுதம்பாளையம்
வைகாசி விசாகத்தையொட்டி காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் 24 குடம் பால் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சுவாமியை தேரில் அமர வைத்து கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். இதேபோல் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவில், பவுத்திரம் பாலமலை முருகன் கோவில், வெண்ணமலை முருகன் கோவில் ஆகிய முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள முருகன் கோவிலில் பாலசுப்ரமணியருக்கு  18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


Next Story