ஓமலூரில் போலீசாருக்கு கவச உடை
போலீசாருக்கு கவச உடை
ஓமலூர்:
ஓமலூர் உட்கோட்டத்தில் உள்ள ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மற்றும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகியவற்றில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கவச உடை வழங்கப்பட்டது. ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் போலீசாருக்கு முக கவசம், சானிடைசர், கவச உடை என ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கொேரானா தடுப்பு பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story