பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் கொள்முதல் விலைக்கே காய்கறிகள் விற்பனை


பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் கொள்முதல் விலைக்கே காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 26 May 2021 4:09 AM IST (Updated: 26 May 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலைக்கே காய்கறிகள் விற்பனை

ஆட்டையாம்பட்டி:
வீரபாண்டி ஒன்றியம் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை பின்பற்றும் வகையில் சரக்கு வாகனங்களில் ஊராட்சி நிர்வாகத்தினர் கொள்முதல் விலைக்கே காய்கறிகளை விற்பனை செய்தனர். இந்த பணியை வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜ் கணேஷ் தொடங்கி வைத்தார்.
தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.15, கத்தரிக்காய் ரூ.20, பீட்ரூட் ரூ.35, முட்டைகோஸ் ரூ.40 மற்றும் கீரை வகைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ்குமார், துணைத்தலைவர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

Next Story