தேவூர் பகுதியில் பலத்த மழை: எள் பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
எள் பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
தேவூர்:
தேவூர் அருகே சென்றாயனூர், கொட்டாயூர், பாலிருச்சம்பாளையம், பெரமாச்சிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பருத்தி, எள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி செடிகளுக்கு மண் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் எள் சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள் தற்போது எள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேவூர் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக சோளம், எள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாய்ந்து சேதமானது. இது விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில விவசாயிகள் எள்ளை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து உலர்த்தி வந்தனர். இந்த நிலையில் பலத்த மழை பெய்ததால் எள் நனைந்து சேதமானது. இதன்காரணமாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Related Tags :
Next Story