நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் எடுக்க காவிரி ஆற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
காவிரி ஆற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
மேட்டூர்:
நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் எடுக்க ேமட்டூரில், காவிரி ஆற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கதவணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு, காவேரி கிராஸ், செக்கானூர் ஆகிய பகுதிகளை கடந்து ஈரோடு மாவட்டம் வழியாக பல்வேறு மாவட்டங்களில் சென்றடைகிறது. செக்கானூர் என்ற இடத்தில் கதவணை மின் நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீரை தேக்கி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த கதவணை மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, கதவணையில், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக காணப்படுகிறது.
மணல் மூட்டைகள்
மேலும் மேட்டூர் அனல் மின் நிலைய 4 ரோடு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலைய நால்ரோடு அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியில் சேலம் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக ஓடுவதால், நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீரை எடுத்து செல்வதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் தண்ணீரை தேக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, நீரேற்று நிலையங்களுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story