கீழ்வேளூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசம் - ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
கீழ்வேளூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமானது. இதில் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதமடைந்தது.
சிக்கல்,
கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி ஜீவா தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60).விவசாய கூலி தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story