53 அடியை எட்டிய மஞ்சளாறு அணை


53 அடியை எட்டிய மஞ்சளாறு அணை
x
தினத்தந்தி 26 May 2021 6:24 PM IST (Updated: 26 May 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

53 அடியை மஞ்சளாறு அணை எட்டியது. இதனால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இது, 57 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

முதல்போக பாசனத்துக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மார்ச் மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இ்தனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

நேற்று மதியம் 12 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியது. இதனையடுத்து பொதுப்பணி துறையினர், 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவராயங்ேகாட்டை உள்பட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதையடுத்து, கடந்த 20-ந்தேதி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story