கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனிப்பிரிவு போலீசார்
கோவில்பட்டி காமராஜ் தெரு பகுதியில் விற்பனைக் காக கஞ்சா பதுக்கி வைக்கப் பட்டுள்ள தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் மற்றும் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் கருப்பசாமி, ராம்சுந்தர் ஆகியோர் காமராஜர் தெரு பகுதியில் ரோந்து சென்றனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது சந்தேகப்படும் படியான ஆட்கள் நடமாட்டம் இருந்த வீட்டை சுற்றி வளைத்து போலீசார் சோதனை யிட்டனர். அப்போது வீட்டில் 10 கிலோ கஞ்சா விற்பனைக் காக பதுக்கி வைக்கப் பட்டு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
கஞ்சாவை பதுக்கிய தாக காமராஜர் தெருவை சேர்ந்த தங்கச்சாமி மகன் தங்கராஜ் (வயது 24), முனியசெல்வம் மகன் கார்த்திக்(20) ஆகியோரை பிடித்து, கிழக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர்.
இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story