தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஏழைகளுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.
நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு ஆகிய நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி நிவாரண உதவிகளை வழங்கி பேசினார்.
ஒத்துழைப்பு
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்து சம்பாதிக்க கூடிய மக்களுக்கு இது மிகவும் சிரமமான காலம் ஆகும். இந்த நேரத்தில் நம்முடைய உயிரைக் காப்பதுதான் முக்கியமாக உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும். அதிலும் இரண்டு முககவசம் அணிந்தால் மிகவும் நல்லது. அதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், நாகராஜன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story