துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்


துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 26 May 2021 10:01 PM IST (Updated: 26 May 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்.

பழனி : 

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உடைகள், முக கவசம், கிருமி நாசினி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 


நிகழ்ச்சியில் மண்டல ஊராட்சி அலுவலர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா, தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ராமராஜ், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, டாக்டர் ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுருளியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக தொப்பம்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் வேப்ப மரக் கன்றுகளை திட்ட இயக்குனர் நட்டு வைத்தார்.

Next Story