வேதாரண்யம் பகுதியில், 2-வது நாளாக சூறைக்காற்று உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது
உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது
வேதாரண்யம்:-
வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக சூறைக்காற்று வீசியது. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உப்பளங்களுக்கு கடல் நீர் வரும் வாய்க்கால் நிரம்பி வருகிறது. பல இடங்களில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது. உப்பு உற்பத்தி நடந்து வந்த நிலையில் கடல் நீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடல்நீர் புகுந்த பகுதியில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க 15 நாட்களாகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story