மிளிதேன் பகுதியில் கரடிகளை பிடிக்க கூண்டு வைப்பு


மிளிதேன் பகுதியில் கரடிகளை பிடிக்க கூண்டு வைப்பு
x
தினத்தந்தி 26 May 2021 10:27 PM IST (Updated: 26 May 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

மிளிதேன் பகுதியில் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன் 3 கரடிகள் பேக்கரியின் கதவை உடைத்து சேதப்படுத்தின. இதையடுத்து வனத்துறையினர் கரடிகளை பிடிக்க கூண்டு வைத்தனர். இதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. 

இந்த நிலையில் மற்ற 2 கரடிகள் தொடர்ந்து மிளிதேன் பகுதியில் பகல் நேரத்திலேயே உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி மற்றும் வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, அப்பகுதியில் உலா வரும் கரடிகளை பிடிக்க கூண்டு வைத்தனர். 

அந்த கூண்டிற்குள் கரடிகளுக்கு பிடித்தமான பழவகைகள் வைக்கப்பட்டன. மேலும் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Next Story