ஆம்பூரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
ஆம்பூரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
ஆம்பூர்
ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் (வயது29). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நண்பர் நபிஸ் என்பவருடன் ஆம்பூர் அடுத்த கம்பிகொல்லை பகுதியிலுள்ள ஆனை மடுகு தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென இம்தியாஸ் நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்கச் சென்ற நபிசும் தண்ணீரில் மூழ்கி திணறி உள்ளார். இதைபார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் நபிசை மீட்டனர்.
இம்தியாஸ் தடுப்பணையில் உள்ள சேற்றில் சிக்கியதால் அவரை மீட்க முடியாமல், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி இம்தியாசை பிணமாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story