காயமடைந்த மான் மீட்பு


காயமடைந்த மான் மீட்பு
x
தினத்தந்தி 27 May 2021 12:18 AM IST (Updated: 27 May 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் காயமடைந்த மானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சைமையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு உள்ளது. தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதாலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததாலும் வனப்பகுதியில் இருந்து சாலைகளில் சுற்றித்திரியும் மான்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இவ்வாறு கூட்டமாக வந்த மான்கள் கூட்டத்திலிருந்து பிறந்து ஒரு மாதமே ஆன புள்ளி மான் குட்டி ஒன்று பிரிந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வாழை குளம் வனப்பகுதி சாலையில் அதிகாலை வேலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற  ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் அந்த மானை பார்த்தனர். அப்போது மானின் காலில் காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மானை  ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி ஆனந்த் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி ஆகியோர் உத்தரவின் பேரில் ராஜபாளையத்தில் உள்ள தனியார் வன விலங்குகள் சிகிச்சை மையத்திற்கு அந்த மானை கொண்டு சென்றனர். 
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்டெடுக்கப்பட்ட மானின் காலில் உள்ள காயம் ஆறியபின் செண்பகத்தோப்பு பகுதியில் அதிக மான்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொண்டு போய் விடப்படும் என கூறினார். 

Next Story