குமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆய்வு


குமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2021 12:29 AM IST (Updated: 27 May 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
குமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.
சூறைக்காற்றுடன் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ள பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்ய நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தார். பின்னர் அவர், மார்த்தாண்டம், தேங்காப்பட்டணம் துறைமுகம், குழித்துறை பாலம் உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மீட்பு பணி
அப்போது அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பு குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்காக நெல்லையில் இருந்து 30 பேரிடர் மீட்பு படையினரும், 144 மாநில சிறப்பு போலீஸ் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் 140 பேரும் தற்போது வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

Next Story