மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: திருக்குறுங்குடி நம்பியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் நேற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் நேற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மலைப்பகுதியில் கனமழை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவடி, ராஜபுதூர் உள்பட திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய கனமழை கொட்டியது. இந்த மழையினால் வறண்டு கிடந்த திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் திருமலைநம்பி கோவில் பகுதியிலும், வனத்துறை சோதனை சாவடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது.
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உயர்ந்துள்ளது. குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story