பொள்ளாச்சியில் 2 வது தவணை தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
பொள்ளாச்சியில் 2 வது தவணை தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி காமாட்சி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 84 நாட்களுக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு 2-வது தவணை தடுப்பூசி போட பலர் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதுபோன்று நாச்சிமுத்து பிரசவ விடுதியில் முதற்கட்ட தடுப்பூசி போட்டதால், அங்கு தடுப்பூசி போட பலர் வந்தனர். ஆனால் அந்த விடுதி மூடி இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அத்துடன் அவர்கள் காமாட்சி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையான அறிவிப்பு இல்லாததே இதற்கு காரணம். எனவே எங்கு?. எப்போது? தடுப்பூசி போடப்படும் என்ற விவரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story