களக்காட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
களக்காட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
களக்காடு:
களக்காட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா வீட்டில் கருப்பு கொடி ஏற்றி கண்டன போரட்டம் நடந்தது. இதில் நகர பொருளாளர் பேராசிரியர் முகம்மது மதார், இணை செயலாளர் ராஜா முகம்மது, ஆரிப் பைஜி, காஜா, ஜமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு அருகே கருவேலங்குளத்தில் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஸ்வர்ண லட்சுமி, மனோபிரியா, வின்சி ஆகியோர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தொ.மு.ச.
இதேபோல் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று தி.மு.க.வின் தொ.மு.சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொ.மு.ச. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். பணிமனை கிளை தலைவர் துரை, செயலாளர் எபனேசர், பொருளாளர் சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story