கொரோனா சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை


கொரோனா சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 27 May 2021 12:39 AM IST (Updated: 27 May 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சங்குமணி கூறினார்.

விருதுநகர், 
விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் சங்குமணி தனி அதிகாரி மற்றும் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மருத்துவ அதிகாரிகளும், டாக்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி போடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டருடன் கலந்தாய்வு செய்து அவரது வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் ஆச்சிஜன் படுக்கைகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து கூடுதல் படுக்கைகள் மட்டும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story