குமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது
குமரி மாவட்டத்தில் புதிதாக 967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புதிதாக 967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-வது அலை அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 967 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் மட்டும் 231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதே போல அகஸ்தீஸ்வரம் வட்டாரம்-134, கிள்ளியூர் வட்டாரம்-58, குருந்தன்கோடு வட்டாரம்-157, மேல்புறம் வட்டாரம்-39, முன்சிறை வட்டாரம்-37, ராஜாக்கமங்கலம் வட்டாரம்-63, திருவட்டார் வட்டாரம்-78, தோவாளை வட்டாரம்-83 மற்றும் தக்கலை வட்டாரம்-85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் திருநெல்வேலியில் இருந்து வந்த 2 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் பலி
குமரி மாவட்டத்தில் தினமும் கொரோனாவுக்கு பலியாகுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து 10-ஐ தாண்டியே உள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story