களக்காடு, சேரன்மாதேவியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி
களக்காடு, சேரன்மாதேவியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
களக்காடு:
களக்காடு, சேரன்மாதேவியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
தடுப்பூசி போடும் பணி
தமிழக அரசு உத்தரவுப்படி, திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஆரம்ப சுகாதார நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியதர்ஷனி அறிவுரைப்படி நடமாடும் மருத்துவ குழுவின் சார்பில், டாக்டர் பீர்முகைதீன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி களக்காடு பெரிய தெருவில் திறந்த வெளியில் வைத்து நடைபெற்றது.
முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மொத்தம் இளைஞர், இளம்பெண்கள் உள்பட 49 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வமுடன் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி
இதேபோல் சேரன்மாதேவி நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் காதர், டாக்டர் ஜேம்ஸ், கோவிட் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த தாசில்தார் பார்கவி தங்கம், மண்டல துணை தாசில்தார் மகாராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திரளான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story