மாவட்டத்தில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 20 பேர் பலி; புதிதாக 1,775 பேருக்கு தொற்று


மாவட்டத்தில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 20 பேர் பலி; புதிதாக 1,775 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 27 May 2021 1:03 AM IST (Updated: 27 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,775 பேருக்கு தொற்று உறுதியானது.

திருச்சி, மே.27-
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மின்வாரிய ஊழியர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,775 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக 1,775 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,775 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரை ஒட்டியுள்ள கல்லாத்துக் கோம்பையில் மலைவாழ் மக்கள் 17 பேரும் அடங்குவர். இதனால் மாசி பெரியண்ணசாமி கோவில் வளாகத்துக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு இப்பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 50,937 ஆக அதிகரித்துள்ளது. 
20 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற எடமலைப்பட்டியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 497 ஆக உயர்ந்தது. அதே நேரம் தொடர் சிகிச்சையில் 10,823 பேர் உள்ளனர். 1,264 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 39,617 ஆகும்.
457 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 25 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 368 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 64 என மொத்தம் 457 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story