செம்மண் திருடிய 4 பேர் கைது


செம்மண் திருடிய 4 பேர் கைது
x

செம்மண் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாடிப்பட்டி,மே.
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செம்மினிப்பட்டி கண்மாய் பகுதியில் சிலர் செங்கல் சூளைக்கு செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் உரிய அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டிரைவர்கள் செம்மனிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது31), பெருமாள் (35), பஞ்சுமுத்து (42) மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர் மேட்டுநீரேத்தானை சேர்ந்த கார்த்திக் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் லாரி, டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story