கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பீடி காண்டிராக்டர் பலி


கடையம் அருகே   மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பீடி காண்டிராக்டர் பலி
x
தினத்தந்தி 27 May 2021 1:19 AM IST (Updated: 27 May 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பீடி காண்டிராக்டர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடையம்:
கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பீடி காண்டிராக்டர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பீடி காண்டிராக்டர்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பக்கீர் மைதீன் (வயது 42). பீடி காண்டிராக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று தென்காசியில் இருந்து பொட்டல்புதூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் (20), ரகுமான்யாபுரத்தை சேர்ந்த சேர்வராஜ் (19), செல்வகுமார் (19) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்காக தோரணமலை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். 

பலி

கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் சோதனை சாவடி பகுதியில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராவிதமாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பக்கீர் மைதீன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பக்கீர் மைதீன் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story