அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2021 1:42 AM IST (Updated: 27 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை மையம், தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்:
கொரோனா சிகிச்சை மையம், தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். தமிழகஅரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சை), செ.ராமலிங்கம் (மயிலாடுதுறை), எஸ்.சண்முகம் (மாநிலங்களவை), எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை), ஜவாஹிருல்லா (பாபநாசம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வரவேற்றார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களை எல்லாம் கேட்டறிந்த பிறகு இறுதியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்துரை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேரில் ஆய்வு
பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு தகவல் மையத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், தஞ்சை மேம்பாலம் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும், தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாலையில் தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள ரெயில்வே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையத்தையும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்வுக்கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 80 படுக்கை வசதிகளையும், கலையரங்கத்தில் படுக்கை வசதிகள் அமைக்கப்படுவதையும், வல்லம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story