திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு சீல்
திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் நேற்று 2 பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் மண்டல துணை தாசில்தார் இளவரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 பெட்டிக்கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். இதனால், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஊரடங்கில் சிமெண்டு ஆலைகளுக்கு லாரிகள் மட்டும் இயங்கலாமா? எனக்கேட்டு பெரியதிருக்கோணம் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து தனியார் சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரிகளை முனியங்குறிச்சி செங்குளம் ஏரிக்கரை அருகே சிறைபிடித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கணேசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story