பெங்களூருவில் இருந்து ஓமலூருக்கு பழச்சாறு பெட்டிகளில்1,200 மதுபாக்கெட்டுகள் கடத்தல்
1,200 மதுபாக்கெட்டுகள் கடத்தல்
ஓமலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதிகளுக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் இரும்பாலை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடுகுளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் பழச்சாறு பெட்டிகள் இருந்தன. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டிகளை போலீசார் பிரித்து பார்த்த போது உள்ளே மதுபாக்ெகட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 25 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் 180 மில்லி லிட்டர் கொண்ட 48 மதுபாக்கெட்டுகள் வீதம் 1,200 பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும்.
இதையடுத்து சரக்கு வேனில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஜோடுகுளி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 37) அவருடைய தம்பி ரமேஷ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், சரக்கு வேன் மற்றும் 1,200 மதுபாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story