பென்னாகரத்தில் கொரோனாவில் குணமடைந்தவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
பென்னாகரத்தில் கொரோனாவில் குணமடைந்தவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சையில் குணமடைந்த அவர் கடந்த 21-ந் தேதி வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு கடந்த 23-ந் தேதி முதல் உடலில் அலர்ஜி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கண் பகுதி கருப்பு நிறத்தில் மாறியதாகவும் பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்ததையொட்டி மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
=======
Related Tags :
Next Story