அரூர் பகுதியில் வாகனங்களில் மது கடத்தி வந்த 5 பேர் கைது ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்


அரூர் பகுதியில் வாகனங்களில் மது கடத்தி வந்த 5 பேர் கைது ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 May 2021 10:44 PM GMT (Updated: 26 May 2021 10:44 PM GMT)

அரூர் பகுதியில் வாகனங்களில் மது கடத்தி வந்த 5 பேர் கைது ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

அரூர்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி மற்றும் பால் வாகனங்கள் மூலம் மது பாட்டில்கள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அஹமத், சோமசுந்தரம் தலைமையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கோமளவல்லி மற்றும் போலீசார் குமாரஅள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையைில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 காய்கறிகள் ஏற்றி வந்த வாகனம், ஒரு பால் வாகனம் மற்றும் ஒரு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்கள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாப்பநாய்க்கன்வலசையை சேர்ந்த வேலு (வயது 40), பாபு (23) காரில் வந்த சேலம் மாவட்டம் புதுச்சேரிபட்டியை சேர்ந்த சரவணகுமார் (44) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஆரோக்கியராஜ் (31) சகாய தமிழ்ச்செல்வன் (41), அதகப்பாடியை சேர்ந்த சக்திவேல் (27), ராஜேஷ் (31)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
கைதானவர்களிடம்  இருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 458 மதிப்புள்ள 2,956 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
===

Next Story