ஊரடங்கால் மதுகடைகள் மூடல்: போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த தொழிலாளி பலி
போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம்,
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மதுகடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான சங்கர் (வயது 40), கிருஷ்ணா (58), சிவசங்கர் (44) ஆகியோர் போதைக்காக தின்னரில்(வார்னீசுடன் கலக்கும் திரவம்) எலுமிச்சை சாறை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.
பலி
இதில் சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிவசங்கர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், கிருஷ்ணா ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story