திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணி நகராட்சி ஆணையர் ஆய்வு


திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணி நகராட்சி ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2021 6:46 AM IST (Updated: 27 May 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணி நகராட்சி ஆணையர் ஆய்வு.

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கினை பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. மேலும் அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணியையும் முடுக்கி விடப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

அப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவரும் முக கவசம் அணிந்து வரிசையில் நின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணியை நகராட்சி ஆணையர் சந்தானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story