எலுமிச்சை விலை வீழ்ச்சி


எலுமிச்சை விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 27 May 2021 5:17 PM IST (Updated: 27 May 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

போடி, பெரியகுளம் பகுதிகளில் எலுமிச்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

போடி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வலசை, ஊத்தாம்பாறை, அத்தியூத்து, அருங்குளம் கொட்டக்குடி மற்றும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு பகுதி, அகமலை, கன்னக்கரை, ஊரடி ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது எலுமிச்சை பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக அவற்றை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

குறிப்பாக கோடைக்காலத்தில் எலுமிச்சை பழங்களின் ேதவை அதிகமாக இருக்கும். இதனால் விலையும் ஏறுமுகமாக காணப்படும்.
அதன்படி இந்த மாதத்தின் முதல் வாரத்தில், ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால் தற்போது வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால், கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்குநாள் எலுமிச்சை பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story