கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகி விட்டதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்தார்.
கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகி விட்டதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்தார்.
குன்னத்தூர்
கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகி விட்டதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்தார்.
கொரோனாவின் கோர தாண்டவம்
கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு மனித சமூதாயம் நிலை குலைந்து போய் உள்ளது. அதன் கொட்டத்தை அடக்க ஊரடங்கு, தடுப்பூசி, தனிமனித இடைவெளி என்று அதற்கு பிடிக்காததை செய்தாலும் நம்மை விட்டு போகாமல் நழுவி வருகிறது. ஈவு இரக்கமற்ற இந்த நோய் பிறக்கும் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் அனாதையாக்கி வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்வு, தொழில், கல்வி என அத்தனையும் பறித்துக்கொண்ட கொரோனா ஒவ்வொரு குடும்பத்தையும் சிதைக்க பார்க்கிறது. உன்னதமான உறவுகளை இழந்தால் வாழ்வு நரமாகி விடுமே. கொரோனாவால் இறந்து விட்டார்கள் என்ற உண்மையை எத்தனைநாள் உறவுகளிடம் மறைக்க முடியும். அப்படிதான் ஒரு வயதான மூதாட்டிக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் இவர்கள் 5 பேரும் கொரோனாவால் இறந்து விட்டார்கள் என்பதை 2 நாட்களுக்கு மேல் மறைக்க முடியாமல் உண்மையை பக்கத்து வீட்டார் கூறியவுடன் மூதாட்டி அதிர்ச்சியில் இறந்து விட்டார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
ஆம்.. படுத்த படுக்கையாய் இருந்த மூதாட்டிக்கு வயது 70. இவருக்கும் உடல்நிலை சரியில்லை. இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள். ஒவ்வொரு வேளையும் தனது தாயாருக்கு தவறாமல் உணவு கொடுத்து வந்தனர் மகன்கள். ஆனால் கடந்த 3 நாட்களாக யாரும் உணவு கொண்டு வரவில்லை. எனவே தனது மகன்களின் பெயரை கூறி உணவு கேட்டுள்ளார். ஆனால் பதில் இல்லை. எனவே மருமகள் பெயரை கூறி உணவு கொண்டுவருமாறு கூறியுள்ளார். பாவம் இந்த மூதாட்டிக்கு இவர்கள் 5 பேரும் இறந்த விவரம் தெரியவில்லை.
ஆனால் உண்மையை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும், அந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்து விட்டார். இது பற்றிய விவரம் வருமாறு
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்ததை சேர்ந்தவர் தெய்வராஜ்வயது 42. இவரது மனைவி சாந்தி 35. இவர்கள் இருவருக்கும் கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இதையடுத்து தெய்வராஜின் அண்ணன்கள் ராஜா 50, சவுந்தரராஜன்45, தங்கராஜ் 52 ஆகியோரும் கொரோனாவால் இறந்துவிட்டனர்.
மூதாட்டி சாவு
ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து சில நாட்களில் கொரோனாவால் இறந்த தகவல் அவர்களின் தாயார் பாப்பாளுக்கு 70 தெரிவிக்கப்படவில்லை. அவரும் வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனது மகன்கள், மருமகள் யாரும் வராததைக்கண்டு உறவினர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மகன்களும், மருமகளும் கொரோனா நோய் தொற்றால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அன்று இரவே அதிர்ச்சியில் உறைந்து போன பாப்பாள் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
Related Tags :
Next Story