மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது. அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருப்பத்தூர்
ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். கலெக்டர் சிவன்அருள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அணைக்கட்ட அனுமதிக்காது
மேகதாது அணை கட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது. அதற்குள் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும், எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்காது. அதற்கான முழு முயற்சியை அரசு எடுக்கும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும் மற்றும் ராணிப்பேட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரியும் அமைக்க முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை போக்க, டாக்டர்கள், செவிலியர்கள் உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story