7 மாவட்டங்களுக்கு ஒடிசாவில் இருந்து 66 டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது.


7 மாவட்டங்களுக்கு ஒடிசாவில் இருந்து 66 டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது.
x
தினத்தந்தி 27 May 2021 7:35 PM IST (Updated: 27 May 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களுக்கு ஒடிசாவில் இருந்து 66 டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது.

திண்டுக்கல்: 


ஆக்சிஜன் தேவை
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

இந்த 2-வது அலையில் உருமாறிய கொரோனா வைரஸ் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது. 

இதனால் உயிரிழப்பு தினமும் உயர்ந்து வருகிறது. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன.

இதில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், கடந்த சில வாரங்கள் முன்பு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

இதையடுத்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒடிசா, மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது.
66 டன்
இதில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் தேவைக்கு ரெயில் மூலம் மதுரைக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. 

இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் 5 டேங்கர்களில் 66.1 டன் ஆக்சிஜன் நேற்று திண்டுக்கல் வழியாக மதுரைக்கு வந்தது.


மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தின் குட்ஷெட்டில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மாவட்ட வாரியாக ஆக்சிஜன் டேங்கர் அனுப்பி வைக்கப்பட்டன. 

இதில் தேனிக்கு 8.12 டன், திண்டுக்கல்லுக்கு 6.44 டன், விருதுநகருக்கு 6.5 டன், மதுரைக்கு 23.72 டன், சிவகங்கைக்கு 8 டன், நாமக்கல்லுக்கு 6.32 டன், கரூருக்கு 7 டன் என ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

Next Story