குலசேகரன்பட்டினத்தில் 2 பெண்கள் அரிவாளால் வெட்டு
குலசேகரன்பட்டினத்தில் 2 பெண்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அறம்வளர்த்தநாயகி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் பெருமாள் (்வயது 30). பெற்றோர் கிடையாது. சற்று மனநலம் பாதிக்கப்பட் இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர்களான சுடலைமுத்து மனைவி சுப்புலெட்சுமி (40), கிருஷ்ணன் மனைவி கல்யாணி (50) ஆகிய இருகுடும்பத்தினரிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உனது சொத்தை விற்று விட்டு வெளியூர் எங்காவது சென்று விடு என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் உறவினர்கள் தன்னை ஊரை விட்டு விரட்ட பார்க்கின்றனர் என எண்ணி சுப்புலெட்சுமியை அரிவாளால் வெட்டினார். அப்போது தடுக்க வந்த கல்யாணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுப்புலெட்சுமி அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டிணம் சப்இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story