வேலூர் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 31 பேர் அனுமதி


வேலூர் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 31 பேர் அனுமதி
x
தினத்தந்தி 27 May 2021 10:01 PM IST (Updated: 27 May 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் மேலும் 31 பேர் அனுமதி

வேலூர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் நபர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் தாக்குகிறது. அதேபோன்று சர்க்கரை நோயிற்கு சிகிச்சை பெறும் நபர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் மற்றும் பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 40 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயது ஆண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் சி.எம்.சி. மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறி காணப்பட்ட பல்வேறு மாவட்டங்கள், பிறமாநிலங்களை சேர்ந்த மேலும் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த நோய் அறிகுறியுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டுள்ளனர். 32 பேரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஓரிருநாளில் தெரிய வரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story