வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்


வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 27 May 2021 10:18 PM IST (Updated: 27 May 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்

வாணியம்பாடி

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரேஷன்கடை மட்டும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையில் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியில் உள்ள பெரும்பான்மையான கடைகளில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் அதிகமாக கூடியது. இதையடுத்து கலெக்டர் சிவன்அருள் உத்தரவின்பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று கோணாமேடு பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ரேஷன் கடை முன்பு மக்கள் கூட்டமாக நின்றிருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரித்தார். அப்போது ரேஷன் கடையில் அரிசி வாங்கிச் செல்ல நிற்பதாகவும், ஒரு சில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாகவும் வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அலுவலர்களை வரவழைத்து விசாரித்தார்.
தொடர்ந்து கூட்டமாக இருந்த மக்களிடம் டோக்கன் வழங்கிநாளை (இன்று) வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினார்.

Next Story